குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்! - Signature movement
🎬 Watch Now: Feature Video
உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி தொடங்கி வைத்தார். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து துறை அலுவலர்களும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.