சாலையில் குடுகுடுவென ஓடிய கரடி! - சாலையில் ஓடிய கரடி
🎬 Watch Now: Feature Video
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் இன்று(மே.8) காலை காரில் மூன்று பேர் தல மலை வனச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையின் நடுவே ஒரு கரடி நடமாடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சாலையில் கார் வருவதை கண்ட கரடி அச்சமடைந்து சாலையில் சிறிது தூரம் குடுகுடுவென ஓட்டம் பிடித்தது. கரடி ஓடுவதைக் கண்ட காரில் சென்ற நபர்கள் தங்களது செல்போனில் கரடியை வீடியோ எடுத்தனர்.