பாபர் மசூதி இடிப்பு தினம்: காவல் துறையினர் கொடி அணிவகுப்பு!
🎬 Watch Now: Feature Video
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சிகளை நடத்த டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், குமரி மாவட்ட காவல் துறையின் சார்பில் இன்று (நவ.30) காலை கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் இருந்து தொடங்கியது.
இந்த அணிவகுப்பை குமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டும், குமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு குற்றச் செயல்களை தடுக்கும் வகையிலும் இந்த கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்துகொண்டனர். இந்த அணிவகுப்பு மணிமேடை சந்திப்பு, செட்டிகுளம், வேப்பமூடு சந்திப்பு வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது.