’அதிமுக வேட்பாளர் ஜெயித்தால் இனி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை; அவரிடம் ஓட்டுநராக பணிபுரிகிறேன்’ - அமமுக வேட்பாளர் சவால் - அமமுக வேட்பாளர் கோபால் ராம்
🎬 Watch Now: Feature Video
”திருத்துறைப்பூண்டி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் என் வாழ்நாள் முழுவதும் எந்தத் தேர்தலிலும் நிற்க மாட்டேன்” என அமமுக வேட்பாளரும் திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளருமான கோபால் ராமன் சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலியில், "திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரான சுரேஷ் குமார் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால், ’கோபால் ராம்’ ஆகிய நான், இனிவரும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை. தற்போது நான் வகித்து வரும் ஒன்றியக்குழு பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளும் அவரிடம் ஓட்டுநராகப் பணிபுரிகிறேன்” என்று பகிரங்க சவால் விடுத்துள்ளார். இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.