முகக்கவசம் அணியாமல் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அதிமுக வேட்பாளருக்கு அபராதம் - அதிமுக வேட்பாளர் கப்பச்சி D.வினோத்
🎬 Watch Now: Feature Video
நீலகிரி மாவட்டம், குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கப்பச்சி D.வினோத், குன்னூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது அவர் முகக் கவசம் அணியாமல் வந்த காரணத்தால், நகராட்சி ஊழியர்கள் அவருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வந்த அதிமுக தொண்டர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.