20 ஆண்டுகளுக்கு பின் குமரியை வென்ற தளவாய்!

By

Published : May 5, 2021, 5:00 PM IST

thumbnail
திமுக கட்சியைச் சேர்ந்த ஆஸ்டின் 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரத்தை வீழ்த்தினார். இம்முறை அதிமுக சார்பில் தளவாய் சுந்தரமே மீண்டும் களமிறக்கப்பட்டார். 2001ஆம் ஆண்டு இந்தத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக இருந்த தளவாய் சுந்தரம் அன்றைய ஆட்சி காலத்தில் அதிமுக அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். தற்போதைய தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும் இருந்தார். இம்முறை திமுக வேட்பாளரான ஆஸ்டினை வீழ்த்தி 20 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் வெற்றி வீரராக உருவெடுத்துள்ளார் தளவாய் சுந்தரம்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.