உல்டாவாக உறியடித்த அதிமுக வேட்பாளர்.. சுக்கு நூறான பானை.. - பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் பரப்புரை
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: பெருந்துறை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார், கைகோலபாளையத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, அங்கு நடைபெற்ற உறியடிப் போட்டியில் கலந்து கொண்டார். கண்களை துணியால் இறுக்கமாக கட்டிக் கொண்டு மேலே தொங்க விடப்பட்டிருக்கும் பானையை உடைத்து நொறுக்குவதே உறியடிப் போட்டியாகும். ஆனால் இவர் கொஞ்சம் உல்டாவாக இதை விளையாடினார். இவருக்காக தரையில் வைக்கப்பட்டிருந்த பானையை கண்களை கட்டிக்கொண்டவாறு அடித்து நொறுக்கினார். போட்டியின் போது, சுற்றியிருந்தவர்கள் இவரை உற்சாகப்படுத்தினர்.