கொள்ளையர்களால் நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து! - செங்கல்பட்டு மாவட்ட குற்றச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
செங்கல்பட்டில் நேற்று (பிப்.17) நள்ளிரவு, சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியை வழிமறித்த கொள்ளையர்கள், ஓட்டுநர் சரவணனை சரமாரியாக வெட்டி கொள்ளையடிக்க முற்பட்டனர். இதனால், அவ்வழியே வந்த தனியார் நிறுவன பேருந்து ஒன்றும், ஆம்னி பேருந்து ஒன்றும் லாரியின் பின்புறம் நின்றன. அப்போது, அவைகளுக்கு பின்னால் வந்த கண்டெய்னர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து பேருந்துகளின் மீது மோதியது. இதில், பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.