திமுகவில் புதிதாக 43 ஊராட்சி மன்ற தலைவர்கள் இணைந்தனர் - ஊராட்சி மன்ற தலைவர்கள்
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில், விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் விக்கிரவண்டி, சட்டபேரவை உறுப்பினருமான புகழேந்தி தலைமையில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முன்னிலையில், விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் அதிமுக, பாமக, தேமுதிக, கட்சிகளை சேர்ந்த 43 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பாமக மாநில துணைத்தலைவர் அரிகரன், தொகுதி செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.