சீரி ஏ: குறைந்த நேரத்தில் கோலடித்து சாதனை படைத்த ரஃபேல் லியோ! - சீரி ஏ
🎬 Watch Now: Feature Video
சீரி ஏ கால்பந்து தொடரில் இன்று (டிசம்பர் 20) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஏசி மிலான் அணி - சசுவோலோ எஃப்.சி அணியுடன் மோதியது. இப்போட்டி தொடங்கிய ஆறாவது வினாடியிலேயே ஏசி மிலான் அணியின் ஸ்டிரைக்கர் ரஃபேல் லியோ கோலடித்து அசத்தினார். இதன் மூலம், சீரி ஏ கால்பந்து வரலாற்றில் குறைந்த நேரத்தில் கோலடித்த முதல் வீரர் என்ற சாதனையை லியோ படைத்துள்ளார். இதற்கு முன்னதாக பாவ்லோ போகி எட்டு வினாடிகளில் கோலடித்ததே சாதனையாக அமைந்தது. இப்போட்டியின் முடிவில் ஏசி மிலான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சசுவோலோ எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.