'ஒரு வைரஸ் நம்மை வீட்டில் அமர வைக்கும் என்று நினைக்கவில்லை' - விஜய் ஆண்டனி - vijay antony
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6569986-thumbnail-3x2-vijayantony.jpg)
உலகை அச்சுறுத்திவரும் கரோனா தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை கரோனா வைரஸால் இந்தியாவில் 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதிலிருந்து தற்காத்துக்கொள்ள இந்திய அரசு தேசிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் சிலர் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்காமல் வெளியே செல்கின்றனர். இந்நிலையில் மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், கரோனா வைரஸ் குறித்து ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.