பாக்ஸிங்கில் ஆர்வம் கொண்ட ஸ்ருதிஹாசன் - Viral Video - cinema news
🎬 Watch Now: Feature Video
தற்போது டோலிவுட்டில் பிஸியான நடிகையாக மாறிவிட்ட ஸ்ருதிஹாசன், 'சலார்' படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்தார். நடிப்பு, நடனம், பாடகி என பன்முகத் திறமைகொண்டு சினிமாவில் பணியாற்றி வருபவர், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கின்றார். இந்நிலையில் மும்பையில் வசித்து வரும் ஸ்ருதி, அங்கு முறையாக பாக்ஸிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து பயிற்சியாளருடன் வெறித்தனமாக பாக்ஸிங்கை பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், ஸ்ருதி ஹாசன். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சமீபகாலமாக நடிகைகள் பாக்ஸிங் பயிற்சியில் ஆர்வம் காட்டுகிறார்கள். நிவேதா பெத்துராஜ், சமீரா ரெட்டி, ரகுல் பிரீத் சிங் வரிசையில் தற்போது ஸ்ருதியும் இணைந்துள்ளார்.
Last Updated : Aug 22, 2021, 11:22 PM IST