'எனக்கு பெயர் வைத்தது இவர்தான்..! - ஓவியா ஓபன் - actress ovia
🎬 Watch Now: Feature Video
களவாணி படத்தில் நடித்தபோது ஓவியா என்று பெயர் வைத்தது இயக்குநர் சற்குணம்தான் என்று ஓவியா தெரிவித்துள்ளார். களவாணி 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாடர்னான கலக்கல் ஆடையில் வந்திருந்த ஓவியா, சில நிமிடம் பேசினார். எனது முதல் படம் களவாணி, இயக்குநர் சற்குணம் தான் ஓவியா என்று பெயர் வைத்தார். களவாணி 2 படத்தில் எனக்கும் விமலுக்கும் உள்ள ரொமான்ஸை விட இளவரசு, சரண்யா பொன்வண்ணனுக்கும் இடையேயான ரொமான்ஸ் ரொம்ப நல்லா இருக்கும் என்று தெரிவித்தார்.