எனக்கு எதை கொடுக்க வேண்டும் என்று கடவுளுக்கு தெரியும் - 'அசுரன்' தனுஷ் - அசுரன் தனுஷ்
🎬 Watch Now: Feature Video
அசுரன் 100வது நாள் விழாவில் படத்தின் நடிகர் தனுஷ் பேசுகையில், அசுரன்' வெளியானபோது நான் லண்டனில் இருந்தேன். படம் நன்றாக ஓடிக்கொண்டிருப்பதாக என் அம்மா போன் மூலம் கூறினார். மிகப்பெரிய வெற்றியை கொடுத்துவிட்டு தூரத்தில் இருக்கிறாயே என்று ஆதங்கப்பட்டார். எப்பொழுதுமே வெற்றியை தூரத்திலிருந்து தான் பார்க்க வேண்டும். தோல்வியை அருகில் சென்று பார்க்க வேண்டும். வெற்றியை தலைக்கு ஏற விடக்கூடாது. கடவுளுக்கு தெரியும் எனக்கு எதை கொடுக்க வேண்டும் என்பது அதனால் தான் என்னை தூரத்தில் வைத்திருந்தார் என்று நான் நினைக்கிறேன். வெற்றியை தூரமாக நின்றே ரசிக்க வேண்டும் என்றார்.