’இல்லம் தேடி கல்வித் திட்டம் மாபெரும் வெற்றியைக் கண்டுள்ளது’ - அன்பில் மகேஷ் பொய்யாமொழி - இல்லம் தேடி கல்வி திட்டம்
🎬 Watch Now: Feature Video
சேலத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளின் நிலை குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு, தங்கள் பகுதியைச் சேர்ந்த பள்ளிகள் தொடர்பாக கோரிக்கைகளை தெரிவித்தனர். ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ”இல்லம் தேடி கல்வி மாபெரும் வெற்றியைக் கண்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும், செய்தியாளர்களின் துறை சார்ந்த பல கேள்விகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST