பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா - Pollachi Zamin Uthukuli Sri Mahaliamman Temple Kundam Festival
🎬 Watch Now: Feature Video
பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 8ம் தேதி சக்தி கும்பம் ஸ்தாபனம் செய்தல் நிகழ்ச்சியுடன்தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் இன்று காலை 7 மணிக்கு நடைபெற்றது. விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் குண்டம் இறங்கினர். இதனைக் காண உள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்தனர். வரும் 25ம் தேதி சுவாமி ஊர்வலம், மஞ்சள் நீராடுதல், மகா அபிஷேகம், ஆராதனை பூஜைகளும் நடைபெறுகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST
TAGGED:
kovil function pollachi