அரசுப்பேருந்தை வழிமறித்து பைக்கில் அராஜகம் செய்த இளைஞர் - கண்டுகொள்ளுமா காவல்துறை? - இன்ஸ்டாகிராம்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 17, 2023, 9:16 PM IST

திருவண்ணமலையின் முக்கிய சாலையின் நடுவில் போக்குவரத்தை நிறுத்தி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடுவதற்காக இளைஞர் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் முக்கிய சாலையின் நடுவே தனது விலை உயர்ந்த  இருசக்கர வாகனத்தை நிறுத்திக் கொண்டு, அதிக அளவு புகை வருமாறு வாகனத்தை இயக்கி  ஒரு நிமிடம் அளவிற்கு அவர் நண்பர்களை வைத்து வீடியோ எடுத்து, அதற்கு நடிகர் விஜய்யின் லியோ படத்தில் வரும் பாடாலான நான் ரெடி தான் வரவா பாடலை போட்டு, மாஸ்ஸாக எடிட் செய்து, அதை தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட்  செய்துள்ளார், இளைஞர் ஒருவர்.

முகம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் லைக், கமெண்ட்களுக்காக பொதுப்போக்குவரத்தை நிறுத்தி பயணிகளுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தியது மட்டுமல்லாது அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அனைவரையும் தொந்தரவு செய்துள்ளார். இச்செயல் அந்த வழியாக சென்ற பொதுமக்களுக்கு மிகவும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்பது  சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.

இதையும் படிங்க : Exclusive - நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கும் பல்நோக்கு பணியாளர்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.