"நட்புக்கும் கற்பு உண்டு" - புற்றுநோயால் இறந்த நண்பருடன் உடன்கட்டை ஏறிய இளைஞர்! - உத்தரபிரதேசத்தில் நண்பருடன் உடன்கட்டை ஏறிய இளைஞர்
🎬 Watch Now: Feature Video
பிரோசாபாத் : உத்தர பிரதேச மாநிலத்தில் புற்றுநோயால் உயிரிழந்த நண்பனின் பிரிவை தாங்க முடியாமல், இறுதிச் சடங்கின் போது சக நண்பர் உடன்கட்டை ஏறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் அடுத்த காதியா பஞ்சவாதி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவரது நண்பர் அசோக். புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அசோக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தன் இணை பிரியா நண்பர் உயிரிழந்த தகவல் அறிந்த ஆனந்த், மனவேதனையில் துடிதுடித்து உள்ளார்.
நண்பரின் இறுதி ஊர்வலம் முடிந்த நிலையில் சடலத்திற்கு தீ வைக்கப்பட்டது. இணை பிரியா நண்பர் கண் முன் எரியூடப்படுவதை கண்டு கண்னீர் விட்ட ஆனந்த், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தானும் தீயில் விழுந்தார். உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் வலி தாங்காமல் துடிதுடித்து உள்ளார்.
அருகில் இருந்த யாரும் தீயில் விழுந்த ஆனந்தை மீட்க முன்வரவில்லை என்றும் மாறாக செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார், ஆனந்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். ஆக்ரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு உள்ளூர் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், செல்லும் வழியில் ஆனந்த் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
90 சதவீத தீக்காயங்களால் ஆனந்த் அவதிப்பட்டு வந்ததாகவும் அதன் காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.