ஹைதராபாத்: தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் அஜித் குமார். கார் பந்தயத்திலும் ஆர்வமுள்ள இவர், பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில், துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டபோது நடிகர் அஜித்குமார் கார் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானது. கார் விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சியும் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அஜித் குமாருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிகிறது.
Ajith Kumar’s massive crash in practise, but he walks away unscathed.
— Ajithkumar Racing (@Akracingoffl) January 7, 2025
Another day in the office … that’s racing!#ajithkumarracing #ajithkumar pic.twitter.com/dH5rQb18z0
அஜித்குமார் புதிதாக தொடங்கியுள்ள கார் பந்தய நிறுவனம், துபாயில் வருகிற ஜனவரி 9 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளது. அதனைத் தொடர்ந்து ஐரோப்பா கண்டத்தில் பல்வேறு நாடுகளில் நடைபெறும் பல்வேறு கார் பந்தய தொடர்களிலும் இந்நிறுவனம் கலந்துகொள்ள உள்ளது. அஜித் நிறுவனத்தின் அணி பங்கேற்க இருக்கும் முதல் கார் பந்தய தொடர் இது. இந்த தொடர் துபாயில் 9ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இதையும் படிங்க: ”கதையில சாவுனு வந்தாலே என் பெயரை எழுதிடுறாங்க” - ஆதங்கத்தை கொட்டிய கலையரசன்!
இதற்கான பயிற்சியை அஜித்குமார் அணியினர் நேற்று தொடங்கியுள்ளனர். அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவலாக பகிரப்பட்டது.
‘‘That's racing ’’
— TRENDS AJITH (@TrendsAjith) January 7, 2025
These kind of things is unfortunate somehow it would happened it's all part of the racing.
Hope our dear #Ajithkumar sir is safe and our prayers are valuing him forever to be safe ❤️ https://t.co/FTD7TrnI25 pic.twitter.com/FwWoQIcp8M
இந்நிலையில், அஜித் குமார் துபாயில் இன்று கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் பலத்த சேதமடைந்துள்ளது. இதுதொடர்பான 15 வினாடிகள் வீடியோ காட்சி இணையத்தில் வெளியானது.
இந்த விபத்தில் அஜித்குமாருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என தெரிகிறது. கார் மட்டும் பலத்த சேதத்துக்குள்ளாகியதாக தெரியவந்துள்ளது. வருகிற 9ஆம் தேதி நடைபெற இருக்கும் கார் பந்தயத்திற்கு முன்பு அந்த காரும் முழுமையாக சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அஜித்தின் மேலாளர் தரப்பில் விசாரித்தபோது, " துபாயில் அஜித்தின் பந்தய கார் விபத்தில் சிக்கியதாக வெளியாகியுள்ள தகவல் உண்மை தான். விபத்து நிகழ்ந்த காரில் இருந்து எவ்வித காயமும் இன்றி அஜித் வெளியேறினார். நாளைக்கும் அவர் பயிற்சியில் ஈடுபடுவார்" என்று மேலாளர் தரப்பில் கூறப்பட்டது.