சங்கூதுவதில் சாதனை படைத்த சாதுக்கள்..! ஒரே நேரத்தில் ஆயிரத்தெட்டு பேர்.. - உலக சாதனை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18261521-thumbnail-16x9-p.jpg)
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் அமைப்பின் முயற்சியால் ஒரே நேரத்தில் 1008 சங்குகளைத் தொடர்ந்து மூன்று முறை 15 வினாடிகள் சங்குகளை முழங்குவது உலக சாதனை முயற்சியாக கருதப்பட்டது. இந்த நிலையில் நேற்று ( ஏப்.14 ) ஆயிரத்து 39 நபர்கள் தொடர்ந்து 26.2 வினாடிகள் சங்குகளை ஊதி உலக சாதனை நிகழ்வுகளை நிகழ்த்தினார்கள்.
இந்த உலக சாதனை நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சன்னியாசிகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சங்கு வழங்கப்பட்டது. பின்னர், இந்த உலக சாதனை முயற்சி அங்கிருந்த சன்னியாசிகளால் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் யுனிக் உலக சாதனை அமைப்பு, இந்த நிகழ்வுக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை, கரகம், கடவுள் வேடம் அணிந்து பலர் நடனம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.
இதையும் படிங்க: தேசிய திருநர் தினம்: 1 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும்.. காவலராக போராடி வரும் தஞ்சை யாழினி!