ஈரோடு அருகே மாவிளக்கு ஊர்வலத்தில் பெண்கள் நடனம்! - Puliampatti
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-17670247-thumbnail-4x3-vid.jpg)
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டியில் பிரசித்தி பெற்ற ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெற்று வரும் பண்டிகையை முன்னிட்டு இன்று ஏராளமான பெண்கள் பங்கேற்ற மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. கோவிலிலிருந்து மேள தாளத்துடன் துவங்கிய ஊர்வலமானது பவானி சாகர் சாலை, மாதம்பாளையம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்றது.
இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பக்தி பரவசத்துடன் மாவிளக்கு எடுத்து வந்தனர். ஊர்வலத்தில் இளைஞர்கள், சிறுமிகள் மற்றும் இளம்பெண்களும் உற்சாகத்துடன் மேளதாள இசைக்கு ஏற்றவாறு ஆட்டம் போட்டபடி ஊர்வலமாக வந்தனர். அவர்களுக்கு வழிநெடுகிலும் மக்கள் வரவேற்பு அளித்தனர். மாவிளக்கு ஊர்வலம் கோவிலைச் சென்றடைந்தும் சௌடேஸ்வரி அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டுச் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.