செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி நீர் திறப்பு.. பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக எச்சரிக்கை! - சென்னை மக்களுக்கு எச்சரிக்கை
🎬 Watch Now: Feature Video
Published : Nov 29, 2023, 12:37 PM IST
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை அண்மைக் காலமாக தீவிரமடைந்ததுள்ளது. மேலும், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவ.29) காலை 8.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது.
தென் தமிழகத்தைப் பொறுத்தவரை, வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பதிவாகி உள்ளது. இதேபோல் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிக லேசான மழையானது பதிவாகி உள்ளன.
நேற்று இரவு முதலே சென்னை நகர், அதன் புறநகரிலும் மழையானது பரவலாக பெய்து வருகிறது.
இந்த நிலையில், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து இன்று 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படும் நிலையில், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி குறுஞ்செய்தி வாயிலாக எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.