அரசின் அலட்சியம்..கால்பந்து பதக்கம் வென்ற பள்ளி மாணவியின் காலில் முறிவு
🎬 Watch Now: Feature Video
தேனி: ஊராட்சி பணியின் அலட்சியத்தால் கால்பந்து விளையாட்டில் பதக்கம் வென்ற பள்ளி மாணவியின் காலில் சுவர் இடிந்து விழுந்து, கால் முறிவு ஏற்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியுடன் அவரது தாய் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்க வந்த நிகழ்வு காண்போரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே முத்துசங்கிலிப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார் மற்றும் அவரது மனைவி கற்பகவல்லி. கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்ற நிலையில் இவர்களின் மூத்த மகள் ரூபிகா (14). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் போது ஊராட்சி ஒப்பந்த பணியின் திட்டப்பெயர், சுவர் இடிந்து விழுந்து சிறுமியின் காலில் முறிவு ஏற்பட்டது. இதில் அவரின் காலில் பிளேட் வைக்கப்பட்டுள்ளது.
கால்பந்து விளையாட்டில் பதக்கம் வென்ற மாணவி தற்போது நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருப்பதாகவும், கூலி வேலை செய்து வருவதால் மகளின் மருத்துவ செலவை செய்ய முடியாமலும் பெற்றோர்கள் வேதனையில் உள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் முறிந்த காலுடன் சிறுமியை அழைத்து வந்து, ஆட்சியர் சஜீவனாவிடம் மருத்துவ உதவிகளை கேட்டு மாணவியின் தாய் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க:அம்ரித் பாரத் நிலையத் திட்டம்:கோவை போத்தனூர் ரயில் நிலையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!