thumbnail

By

Published : Mar 27, 2023, 5:30 PM IST

ETV Bharat / Videos

viral video: சாலையின் தடுப்புச்சுவர் மீது ஏறி ஹாயாக உலா வந்த சிறுத்தை!

நீலகிரி: உதகமண்டலம் அருகே கட்டபெட்டு சாலையின் தடுப்புச்சுவர் மீது ஏறி உலா வந்த சிறுத்தையை அவ்வழியாக காரில் பயணித்தவர்கள் தங்களது செல்போனில் காணொலியாக படமாக்கினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உதகை அருகே உள்ள கட்டபெட்டு பகுதியில் சோலைகள் அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது. இங்கு காட்டெருமை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவு உள்ளன. இந்நிலையில் இங்குள்ள சாலையின் தடுப்புச் சுவர் மீது சிறுத்தை ஒன்று உலா வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சிறிது நேரம் சாலையின் தடுப்புச்சுவர் மீது நடந்து சென்ற சிறுத்தை, பின்னர் அங்குள்ள தேயிலை எஸ்டேட்டுக்குள் சென்றது. இதனை இவ்வழியாக காரில் சென்றவர், தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். அப்போது சிறுத்தை அவர்களை சிறிது நேரம் நின்று பார்த்துச் சென்றது. அப்போது எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

இதையும் படிங்க: நீலகிரியில் முள்ளம்பன்றி கடத்திய மூவர் கைது!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.