சாப்பிடலாமா? என கேட்டதற்கு தலை அசைத்து பதில் சொன்ன கோயில் யானை! - திருச்சி செய்திகள்
🎬 Watch Now: Feature Video
திருச்சி திருவானைக்காவலில் உள்ள அருள்மிகு ஐம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் உள்ள யானை, அகிலா. இந்த யானை, பாகன் சொல்லும் அனைத்திற்கும் கட்டுப்பட்டு செய்யும் செயல்கள் அனைத்துமே குழந்தைத்தனம் கொண்டதாகவே உள்ளது. இதன் காரணமாகவே கோயிலில் உள்ள அனைவருக்குமே யானை அகிலாவை மிகவும் பிடித்துவிட்டது.
சிறிய வயதிலேயே இக்கோயிலுக்கு வந்த யானை அகிலா, தனது சுட்டித் தனத்தால் பக்தர்களின் மனம் கவர்ந்த யானையாக விளங்குகிறது. இந்த யானையின் பிறந்தநாள் ஆண்டுதோறும் பக்தர்களால் கேக் வெட்டி மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
பஞ்ச பூதத் தலங்களில் நீர்த் தலமாக விளங்குவது திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோயில். இக்கோயிலில் அகிலா என்ற பெண் யானை உள்ளது. கோயிலில் நடைபெறும் விசேஷங்களில் யானை பங்கேற்பது வழக்கமாக உள்ளது. இந்த அகிலா யானை தினமும் குளிப்பதற்கு குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, நடைப்பயிற்சி செல்ல நடைபாதை ஆகியவை அமைத்து தரப்பட்டுள்ளது.
அவ்வப்போது இந்த யானை செய்யும் ரசிக்கத்தக்க வகையிலான செயல்கள் சமூக வலைதளங்களில் வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், அந்த யானையின் பாகன் ஜம்பு யானை அகிலாவை பார்த்து 'சாப்பிடலாமா?' என கேட்கிறார். அதற்கு அந்த யானை தலையை அசைத்து பதில் கூறுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஓசூர் அருகே கிராமத்தில் நுழைந்த யானைகள் - வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு