அண்ணாமலையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்! தங்க கவசத்தில் விநாயக பெருமான் அருட்காட்சி! - vinayagar chaturthi news
🎬 Watch Now: Feature Video
Published : Sep 19, 2023, 8:12 AM IST
திருவண்ணாமலை: அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சம்பந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று (செப்.18) விநாயகருக்கு சிவாச்சாரியார்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க அரிசி மாவு, பால், பழம், தேன், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது.
பின் மலர்களால் மாலை அலங்காரம் செய்து மகா தீபாரதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உற்சவர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளைச் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக, விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
வீடுகளிலும், தெருக்களிலும், பொது மக்கள் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தும், பொங்கல், சுண்டல், புளியோதரை போன்ற பிரசாத உணவுகளை வைத்தும் வழிபட்டனர். பின் ஆலயங்களுக்குச் சென்று விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெகு விமரிசையாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.