விஜயகாந்த் மறைவு: ஒகேனக்கல்லில் தேமுதிகவினர் மொட்டை அடித்து சடங்கு செய்து அஞ்சலி! - மொட்டை
🎬 Watch Now: Feature Video
Published : Jan 8, 2024, 12:17 PM IST
தருமபுரி: தேமுதிக நிறுவன தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிச.28 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டது.
பின்னர் கடந்த 29ஆம் தேதி தேமுதிக அலுவலகத்தில், அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த வகையில், விஜயகாந்த் மறைந்து இன்று(ஜன.8) 11வது நாளையொட்டி தருமபுரி தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 500 பேர், அக்கட்சியின் மாநில அவைத் தலைவர் இளங்கோவன் தலைமையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையில் மொட்டை அடித்து விஜயகாந்த் படத்திற்கு சடங்குகள் செய்தனர்.
இந்த சடங்கு நிகழ்ச்சியில், தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தேமுதிகவினர் கலந்து கொண்டனர். அதன்பின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. முன்னதாக, விஜயகாந்த் இறந்தபோது நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நடிகர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் தற்போது அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது