தர்பூசணி, சாதத்தில் விஜயகாந்த் உருவம்.. கோவை கலைஞர்கள் ஓவியம் மூலம் அஞ்சலி! - Vijayakanth death
🎬 Watch Now: Feature Video
Published : Dec 29, 2023, 12:52 PM IST
கோயம்புத்தூர்: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நேற்று காலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தற்போது அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடல் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4.45 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலக வளாகத்தில், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் அவரது உடலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் ஒருவர் தர்பூசணி பழத்திலும், உணவிலும் விஜயகாந்த் உருவத்தை வரைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கோவை பீளமேடு பகுதியில் வசித்து வரும் சந்தோஷ். இவர் காய்கறி அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். தற்போது விஜயகாந்த் மறைந்ததையடுத்து, தர்பூசணி பழத்தில் விஜயகாந்த் உருவத்தை செதுக்கி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதேபோல் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ராஜா என்ற நகை வடிவமைப்பு கலைஞர் "பசியாறும் சோறில் விஜயகாந்த்" என்ற தலைப்பில் சாப்பாட்டில் மஞ்சள் பொடியை கொண்டு விஜயகாந்த் உருவத்தை வரைந்துள்ளார். விஜயகாந்த் இல்லத்திற்கு யார் சென்றாலும் அனைவருக்கும் அவர் உணவளிப்பவர் என்பதால் உணவில் மஞ்சள் பொடியைக் கொண்டு அவரது உருவத்தை வரைந்து அஞ்சலி செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.