கந்துவட்டியை கண்டித்து பால் குடத்துடன் போராட்டம்! சாமியார் என எண்ணி ஆசிர்வாதம் வாங்கிய முதாட்டியால் சிரிப்பலை!
🎬 Watch Now: Feature Video
Published : Nov 28, 2023, 9:52 PM IST
தூத்துக்குடி: காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் வழக்கறிஞருமான அய்யலுச்சாமி என்பவர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். தமிழ்நாட்டில் கந்துவட்டி கொடுமையால் தற்கொலைகள் அதிகரித்து வருவதாகவும், இதனால் கந்துவட்டி சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் மாவட்டந்தோறும் கந்து வட்டிக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு தனிப்படை அமைத்து கந்துவெட்டி புகார் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்டங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், காவி வேஷ்டி அணிந்து பால் குடத்துடன் வந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு புகார் அளிக்க வந்த மூதாட்டி ஒருவர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அய்யலுச்சாமியை சாமியார் என நினைத்து அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினார்.
மூதாட்டியின் இந்த செயல் அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதியில் போராட்ட சூழலைக் கடந்து, சற்று நேரத்திற்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது.