தேனி வீரப்ப அய்யனார் கோயில் திருவிழாவுக்கான கொடியேற்றம்!
🎬 Watch Now: Feature Video
தேனி: தேனி, அல்லிநகரம் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் கீழ் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு வீரப்ப அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகத்திற்குள் உள்ள கொடி மரத்திற்கு கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இன்று, காலை அல்லிநகரம் பகுதியில் இருந்து வீரப்ப அய்யனார் குதிரை வாகனத்தில் புறப்பட்டு மலைக்கோயிலுக்கு வந்தடைந்தார். அதைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்புப்பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டு கொடி மரத்தில் கொடி கம்பம் ஏற்றப்பட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கொடியேற்றும் நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர். கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரைத் திருவிழாவைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தேனியில் அருள்மிகு ஸ்ரீவீரப்பஅய்யனார், அருள்மிகு ஸ்ரீ சோலைமலை அய்யனார் சுவாமி திருக்கோயில் கொடியேற்றம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.