வரலட்சுமி விரதம்: காஞ்சிபுரத்தில் உலக நன்மை வேண்டி 108 தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு - kancheepuram
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதி காமாட்சி ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோவிலில் வரலட்சுமி விரதத்தை ஒட்டி 108 பெண்கள் உலக நன்மை வேண்டி 108 தீபம் ஏற்றி பூஜை செய்து வழிபாட்டில் ஈடுபட்டனர். மேலும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் காளிகாம்பாள் எழுந்தருளி திரளான பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST