தூத்துக்குடி டோல் கேட்டில் நிலக்கரியுடன் கவிழ்ந்த டிப்பர் லாரி.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி! - coal
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கட்ராம் என்பருக்கு சொந்தமாக டிப்பர் லாரி உள்ளது. அந்த டிம்பர் லாரியை மணிகண்டன் என்பவர் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மேல அரசடியில் உள்ள அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி ஏற்றிக் கொண்டு ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது மணிகண்டன் தூத்துக்குடி - மதுரை ரோட்டில் உள்ள புதூர்பாண்டியாபுரம் டோல்கேட் அருகே வந்துகொண்டிருந்த போது, அதிவேகமாக வாகனத்தை இயக்கிய நிலையில் டோல்கேட்டில் முன்னே நின்று கொண்டிருந்த காரை இடித்து தள்ளியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சென்டர் மீடியேட்டரில் மோதி தடம் புரண்டு டோல்கேட்டில் நிலக்கரியோடு கவிழ்ந்தது. பின்னர், அங்கிருந்து லாரி டிரைவர் மணிகண்டன் தப்பி ஓடி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
இது குறித்து புதியம்புதூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உதவி ஆய்வாளர் பாலன் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், ஓட்டுநர் மணிகண்டன் குடி போதையில் வாகனத்தை இயக்கி வந்ததும், அதனால் இந்த சம்பவம் நிகழ்ந்ததும் தெரிய வந்தது. மேலும், எதிர்பாராத இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.