"குளங்களில் மட்டுமே தாமரை மலரும்... ஆட்சியில் அல்ல": எம்.பி திருநாவுக்கரசர் - annamalai
🎬 Watch Now: Feature Video
புதுக்கோட்டையில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் இன்று (மார்ச் 11) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது வட மாநில தொழிலாளர் பிரச்னையில் முடிந்தால் தன்னை கைது செய்து பாருங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக பேசினார். அப்போது, எம்பி திருநாவுக்கரசர், "மத்தியில் செயல்பட்டு வரும் ஆளுங்கட்சியை உடைய மாநிலத் தலைவர் அண்ணாமலை பொறுப்புடன் பேச வேண்டும்.
சட்டத்திற்கு புறம்பாக அண்ணாமலை நினைக்கும் போது, அவர் மீது நடவடிக்கை எடுப்பது அரசினுடைய பொறுப்பு ஆகும். தொட்டுப் பார் என்னை சிறையில் அடைத்துப் பார் என்று சவால் விடுவது எந்த வகையில் நியாயம். சண்டியர் தனமான பேச்சு அண்ணாமலைக்கும், அவரது கட்சிக்கும் நல்லதல்ல என்று எச்சரிக்கை செய்தார்.
மேலும், தமிழ்நாட்டில் விரைவில் தாமரை மலரும் என ஜெ.பி நட்டாவின் கருத்திற்கு பதிலளித்து பேசிய அவர், குளங்களில், ஆறுகளில் மட்டுமே தாமரை மலர்கிறது. வீடுகளிலும், ஆட்சியில் தாமரை மலரவில்லை" என்று விமர்சனம் செய்து பேசினார்.