பணக்கட்டுகளுடன் ஜொலித்த திருச்சி பகவதி அம்மன்.. கடன் தீர திரளான பக்தர்கள் தரிசனம்!
🎬 Watch Now: Feature Video
திருச்சி: மண்ணச்சநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு பகவதி அம்மன் திருவிழாவானது டிசம்பர் 28ஆம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் விதவிதமாக அலங்காரம் செய்யப்பட்டு, அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
அலங்காரங்கள்: முதல் நாள் பகவதி அம்மன், இரண்டாம் நாள் வெங்கடாஜலபதியுடன் பத்மாவதி, மூன்றாம் நாள் ஆதிபராசக்தி, நான்காம் நாள் ராஜராஜேஸ்வரி, ஐந்தாம் நாள் வெண்ணனத்தாழி கிருஷ்ணர், ஆறாம் நாள் காமாட்சி அம்மன், ஏழாம் நாள் வளைகாப்பு அம்மன் அலங்காரம் நடைபெற்றது.
அதன்படி, இந்த விழாவின் முக்கிய நிகழ்வான இன்று தனலட்சுமி அலங்காரம் நடைபெற்றது. அம்மனுக்கு 10, 20, 50, 100, 200, 500 மாதிரி ரூபாய் நோட்டுகளால் தோரணம் அமைத்து பல லட்சm ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு, பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரm மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
தனலட்சுமி அலங்காரம் பூஜையில் கலந்து கொள்வதன் மூலம் கடன் பிரச்சினை தீரும், செல்வ வளம் பணம் பெருகும் என பக்தர்களால் நம்பப்படுகிறது. இதனால் திருச்சி மட்டுமல்லாமல், புறநகர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.