திருவண்ணாமலை வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் நடன போட்டி! - Koothandawar 201th Chariot Festival
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கூத்தாண்டவர் ஆலயத்தில் 201 ஆம் ஆண்டு தேர்த் திருவிழா முன்னிட்டு மகாபாரதம் சொற்பொழிவு 18 ஆம் நாள் அபிமன்யு செய்த அசகாய போர் நிகழ்ச்சியில் மும்பை, சென்னை, திருவண்ணாமலை, மேல்மலையனூர், ஆகிய பகுதியிலிருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டு நடன போட்டியைச் சிறப்பித்தனர்.
ஆண்டு தோறும் ஸ்ரீ கூத்தாண்டவர் தேர்த் திருவிழாவை முன்னிட்டு மகாபாரதம் சொற்பொழிவுகள், பாஞ்சாலி திருமணம், கூத்தாண்டவர் பிறப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து 18வது நாள் அபிமன்யு செய்த அசகாய போர் நிகழ்ச்சியில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டு நடன போட்டியைச் சிறப்பித்தனர். இதில் வேடந்தவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை ரசித்து மகிழ்ந்தனர்.