'ஆடிப்பட்டம் தேடி விதை, நாடி வருகிறது நாட்டு விதை' - பெரம்பலூரில் பாரம்பரிய விதைத் திருவிழா கொண்டாட்டம்
🎬 Watch Now: Feature Video
பெரம்பலூர்: விவசாயத்தை முதன்மையாக கொண்ட மாவட்டம், பெரம்பலூர் மாவட்டமாகும். வானம் பார்த்த பூமியில் மழையை நம்பியே விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இதனிடையே பெரம்பலூர் மாவட்ட இயற்கை விவசாயிகள் ஒன்று கூடி “பாரம்பரிய விதைத் திருவிழா” இன்று (ஜூலை 9) நடைபெற்றது.
மாப்பிள்ளை சம்பா, மிளகு சம்பா, கட்டை கார், ஆற்காடு கிச்சடி, குதிரை வாலி உள்ளிட்ட நெல் ரகங்கள், வேம்பு அலிஞ்சி, மயிற் கொன்றை உள்ளிட்ட பாரம்பரிய சிறு தானிய வகைகள், நாட்டுக் காய்கறிகள், கீரை விதைகள், இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட சாம்பிராணி, சிறுதானியத்தால் செய்யப்பட்ட தின்பண்டங்கள் மற்றும் மூலிகை சோப், பனைமரப்பொருட்களால் செய்யப்பட்ட அலங்காரப்பொருட்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
நஞ்சில்லா உணவு, இயற்கை விவசாயம் குறித்து அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துரைக்கவே இயற்கை விவசாயிகள் ஒன்று கூடி விதைத் திருவிழா நடத்தப்பட்டது.
"ஆடிப் பட்டம் தேடி விதை
நாடி வருது நாட்டு விதை "
என்பதற்கு ஏற்ப பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், இளைஞர்கள் திரண்டனர். மேலும் இயற்கை விவசாயம் குறித்த கருத்துகளும் எடுத்துரைக்கப்பட்டன.