சொல்லாப்பிழை இன்றோடு தீர்ந்தது- பொன்னியின் செல்வன் விழாவில் ஜெயமோகன் பேச்சு - karthi
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15778798-thumbnail-3x2-jaya.jpg)
பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் பேசியபோது, தமிழகத்திற்கு வெளியே யாரிடம் கேட்டாலும் சோழர்களை பற்றி தெரியாது.இப்படம் வெளியான பிறகு சோழர்களை இந்தியா முழுவதும் அறிந்திருப்பர். சோழ வரலாறு பற்றி நூல் எழுதியவர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம். எவ்வளவு எழுதினாலும் அந்த பெரிய படைப்புடைய ஒரு பகுதி தான் படமாக வரும் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் இந்த படத்தில் சோழர்கள் காலகட்டத்தை உங்கள் குழந்தைகளுக்கு காட்ட முடியும். நம்முடைய வரலாற்றை இந்த தலைமுறைக்கு காட்டுவதற்கு இந்த படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தில் கதாபாத்திரங்கள் நாவலில் உள்ள சிறந்த தருணங்கள் வழியாக அனைவரின் கூட்டு முயற்சியோடு எழுதப்பட்டுள்ளது. இத்திரைப்படம் தமிழகத்திலிருந்து இந்தியாவை முன்னோக்கி வைக்கக்கூடிய நம் முன்னோர்களின் கதை என்று கூறினார்
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST