'நான் தான் கதவை திறப்பேன்' - அடம்பிடித்த அகிலா யானையின் க்யூட் வீடியோ!
🎬 Watch Now: Feature Video
திருச்சி: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் அகிலா என்ற யானை உள்ளது. இந்த அகிலா யானை நேற்று (பிப்.15) மதியம், கோயிலின் ராட்சச கதவை தானே தனது தும்பிக்கையால் திறந்து கம்பீரமாக வெளியே வந்தது. அதனை வீடியோவாக எடுத்த கோயில் நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.