'லியோ' படத்தின் முதல் டிக்கெட்டை ரூ.1.10 லட்சம் கொடுத்து வாங்கிய ரசிகர்.. காரணம் என்ன? - thoothukudi news
🎬 Watch Now: Feature Video
Published : Oct 19, 2023, 4:31 PM IST
தூத்துக்குடி: கோவில்பட்டியில் லியோ(Leo) திரைப்படத்தின் முதல் காட்சி டிக்கெட் ஒன்று 1 லட்சத்து 10 ஆயிரத்து ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் பல எதிர்ப்புகளுக்கும், ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இன்று (அக்.19) உலகெங்கும் வெளியாகி உள்ளது.
தற்போது இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூலிலும் சக்கைபோடு போட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள சத்தியபாமா திரையரங்கில் இன்று காலை முதல் காட்சி ரசிகர்கள் ஷோவாக திரையிடப்பட்டது.
இந்த காட்சியின் முதல் டிக்கெட்டை கோவில்பட்டி சென்ட்ரல் லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் செல்வின் சுந்தர் என்பவர் 1 லட்சத்து 10 ஆயிரத்து ஒரு ரூபாய்க்கு வாங்கி உள்ளார். நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்று வரும் இலவச கல்வி பயிலகத்திற்கு வழங்கும் வகையில் இவ்வளவு விலை கொடுத்து வாங்கியதாக அவர் தெரிவித்து உள்ளனர்.