திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் குளம் போல் நிரம்பிய மழைநீர்.. சிரமத்திற்கு ஆளாகும் பக்தர்கள்..
🎬 Watch Now: Feature Video
காரைக்கால்: லட்சத் தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டிலுள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 கடலோர மாவட்டங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும், நேற்று (ஜன. 7) இரவு தொடங்கிய கனமழை இன்று (ஜன. 8) காலை வரை பெய்த சூழலில் 14 சென்டி மீட்டர் அளவு மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
இதேபோல் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் மழைநீர் வெளியேறாமல் குளம் போல் தேங்கியதால் இன்று (ஜன. 8) ஆலயத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனைத் தொடர்ந்து தேங்கி நின்ற மழை நீரைக் கோயில் நிர்வாகம் சார்பில் அப்புறப்படுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டது. மேலும், திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் மழை நீர் தேங்கி நிற்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.