தருமபுரி அங்காளம்மன் கோயில்களில் திருக்கல்யாணம் கோலாகலம்! - dharmapuri
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: அன்னசாகரம் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் மாசி மாத திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் 2ஆம் நாள் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. அப்போது அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் தாண்டவேஸ்வரருக்கும் வேத மந்திரங்கள் முழங்க வெகு விமரிசையாக திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் குமரசுவாமி பேட்டை, வெளிபேட்டை தெரு மற்றும் எஸ்.வி.ரோடு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள அங்காளம்மன் கோயில்களிலும் திருவிழா நடைபெற்றது.