சினிமா பாணியில் கழிவறையில் இருந்து தப்பிய திருடன்.. திருச்சி ஷாக்! - திருச்சி மாவட்ட செய்தி
🎬 Watch Now: Feature Video
திருச்சி: மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் வெள்ளிக்கிழமை மாலை இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தை திருட முயன்றுள்ளனர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த அப்பகுதி இளைஞர்கள், இருவரையும் பிடித்து அவர்களுக்கு தர்ம அடி கொடுத்ததோடு, போலீசாரிடம் ஒப்படைத்தனர். காவல்துறை உதவியுடன் திருட்டில் ஈடுபட்ட இருவரும் சிகிச்சைக்காக மணப்பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கும் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உள்நேயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை காலை வாகன திருடர்கள் இருவரையும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறைக்கு இயற்கை உபாதைகளை கழிக்க காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது அந்த இரண்டு வாலிபர்களில் ஒருவரான தாராபுரத்தை சேர்ந்த சரவணகுமார் மகன் ஆகாஷ் என்பவர் கழிவறை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து கைவிலங்கோடு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். இதையடுத்து அவனுடன் பிடிபட்ட புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை சேர்ந்த சந்திரன் மகன் மாதவன் என்பவரிடம் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழிவறை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அதன் வழியாக கீழே குதித்து மருத்துவமனையின் சுற்றுச் சுவர் மீது ஏறி தப்பி சென்ற திருடன் குமரபட்டியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு இருசக்கர வாகனத்தை திருடி தப்பி சென்றுள்ளான். இந்நிலையில் இரு சக்கர வாகன திருடன் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: "மதுவை ஒழிக்காமல் போதைப்பொருளை எப்படி ஒழிக்க முடியும்" ஏடிஜிபி சங்கர் முன்பு மாணவர் வேதனை பேச்சு!