International tiger Day: சர்வதேச புலிகள் தின விழிப்புணர்வு மனிதச் சங்கிலி: பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்பு.!
🎬 Watch Now: Feature Video
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சர்வதேச புலிகள் தினத்தை ஒட்டி வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாப்போம் என்ற தலைப்பில் தனியார் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நிகழ்ச்சியை முன்னெடுத்தனர். ஆண்டுதோறும் ஜூலை மாதம் 29ஆம் தேசிய சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் தனியார் பள்ளி சார்பில் மாணவர் மனிதச் சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மனிதச் சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் பதாகைகள் ஏந்தியும், புலி வேடமிட்டும் மனிதச் சங்கிலி இயக்கத்தை நடத்தினர்.
இந்த மனிதச் சங்கிலி இயக்கத்தில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா, பெரியகுளம் வனச்சரக அதிகாரி மற்றும் வனத்துறையினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் வனங்களையும் வன விலங்குகளையும் பாதுகாப்போம் என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.
இதையும் படிங்க: சிறைச்சாரல் இன்னிசை குழு - கைதிகளே பாடல் எழுதி இசையமைத்த பாடல் இணையத்தில் வைரல்!