பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6,659 கன அடியாக அதிகரிப்பு! - தென்மேற்கு பருவமழை
🎬 Watch Now: Feature Video
ஈரோடு, கரூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் விளங்குவது, பவானிசாகர் அணை. இதன் மூலம் இந்த மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
இதனால் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றின் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று அணைக்கு நீர்வரத்து 2,598 கன அடியாக இருந்த நிலையில், பருவமழை காரணமாக இன்று நீர்வரத்து 6,659 கன அடியாக அதிகரித்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 77.34 அடியாகவும், நீர் இருப்பு 14.3 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 1,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.