ETV Bharat / state

சென்னை மேயர் பிரியா தலைமையில் நடந்த இந்தாண்டிற்கான கடைசி மாதாந்திர மாமன்ற கூட்டம்! - MAYOR PRIYA

சென்னை மாநகராட்சியின் இந்தாண்டிற்கான இறுதி மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடைப்பெற்றது. இதில் 91 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேயர் பிரியா
மேயர் பிரியா (credit - etv bharat tamil nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2024, 4:47 PM IST

சென்னை: மாநகராட்சியின் இந்தாண்டிற்கான இறுதி மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடைப்பெற்றது. இதில் 91 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் விவரம்:

சென்னையில், 15 மாநகராட்சிகள் மூலமாக மண்டல அலுவலகம், 45 பகுதி அலுவலகம், மாநகராட்சி மருத்துவமனைகள், சென்னை பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் வன்பொருள், மென்பொருள் உள்ளிட்ட தொழில்நுட்பம் பராமரிப்பு செய்ய வேண்டியது அவசியம். இதற்காக ஒராண்டுக்கு இ டெண்டர் விட மாநகராட்சி அனுமதி கோருகிறது. இதற்காக 2023 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி 3 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் கோரப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பல்நோக்கு போக்குவரத்து பேருந்து வளாகத்தை 822 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுமானம் மேற்கொள்ள ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசின் மூலமாக பேருந்து நிலைய திட்ட பகுதிக்கு 200 கோடி ரூபாய், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் பங்களிப்பாக நடைபாதை மற்றும் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதிக்காக 115 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. மீதமுள்ள 506 கோடி ரூபாய் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் மூலம் காலம் சார்ந்த கடனாக தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள நிலையில் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

மாதாந்திர மாமன்ற கூட்டம்
மாதாந்திர மாமன்ற கூட்டம் (credit - etv bharat tamil nadu)

சென்னை பள்ளிகளில் 2023ல்,10 மற்றும் 12ம் வகுப்பில் அரசு பொது தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி ஏற்படுத்திய ஆசிரியர்களை 2024-25ம் கல்வியாண்டில் விடுமுறை நாட்களில் திருச்சி IIM மற்றும் NIET ஆகிய இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

குதிரைகளுக்கான தொழுவங்கள்

சென்னை கடற்கரைகளில் சவாரிக்கு பயன்படுத்தப்படும் குதிரைகளுக்கான தொழுவங்கள் சேப்பாக்கம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் பகுதிகளில் அமைக்க மன்ற கூட்டத்தில் அனுமதிக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் ஒழுங்கற்ற முறையில் மற்றும் அனுமதி பெறாமல் இண்டெர்நெட் நிறுவனங்கள் மூலமாக நிறுவப்பட்டுள்ள கம்பங்களுக்கு அபாரத தொகையை வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேயர் பிரியா
மேயர் பிரியா (credit - etv bharat tamil nadu)

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இண்டெர்நெட் நிறுவங்களாக (JIO AIRTEL & ACT) நிறுவங்கள் மூலம் நடப்பட்ட கம்பங்கள் மற்றும் புதிதாக அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, அதன்படி அனுமதி பெறாமல் நடப்பட்ட கம்பங்களுக்கு ( 1 கம்பத்திற்கு ) 1 லட்சம் அபாராதம் பெற்று அகற்றவும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக நடப்பட்டிருக்கும் கம்பங்களுக்கு ( 1 கம்பத்திற்கு ) 75,000 ரூபாய் அபராதம் விதிக்கவும், ஒழுங்கற்ற முறையில் நடப்பட்ட கம்பங்களுக்கு ( 1 கம்பத்திற்கு ) 50,000 ரூபாய் அபராதத் தொகையை விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பெயர் பலகை

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலம் 1 முதல் 15 வரையில் உள்ள உட்புற சாலைகள் மற்றும் பேருந்து தட சாலைகளில் 8,340 எண்ணிக்கையில் ( Street Name Boards) அமைந்துள்ள பழைய பெயர் பலகைகளை நீக்கி, புதிதாக டிஜிட்டல் பெயர் பலகைகளாக மாற்றி அமைக்கும் பணிக்கு நிர்வாக அனுமதி மற்றும் பணிகள் இரண்டு கட்டமாக நடைபெற ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

15 மண்டலங்களை இரண்டு கட்டமாக பிரித்து, மண்டலம் 1 முதல் 8 வரை உள்ள மண்டலங்களை ஒரு கட்டமாகவும், மண்டலம் 9 முதல் 15 வரை மண்டலங்களை இரண்டாம் கட்டமாகவும், இந்த டிஜிட்டல் பெயர் பலகைகளாக மாற்ற ஒப்பந்தத்திற்கு மாமன்ற கூட்டத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.