"தொட்டாலே உதிரும் பேருந்து நிறுத்த கட்டடம்" - வைரலாகும் வீடியோ - அமைச்சர் பி மூர்த்தி
🎬 Watch Now: Feature Video
மதுரை: கிழக்குத் தொகுதி அங்காடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழவடக்கூர் வருவாய் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பே திறக்கப்பட்ட இந்த கட்டடம் மிகவும் தரமற்ற முறையில் கட்டப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் தொட்டாலே மளமளவென உதிரும் இந்த கட்டடத்தை இளைஞர்கள் சிலர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தியின் தொகுதிக்கு உட்பட்ட பேருந்து நிறுத்தம் என்பதால் மாவட்ட வளர்ச்சிக் குழு மற்றும் மாவட்ட நிர்வாகமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக இந்த பேருந்து நிறுத்தத்தை கட்டிய ஒப்பந்ததாரர் கணேசன் என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மக்களின் வரிப்பணத்தை இவ்வாறு அலட்சியமாக செலவிட்டு யாருக்கும் பயன்படாத வண்ணம் வீணடிப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்க ஒன்று என சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் மத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.