தேனியில் பிரபல பருப்பு நிறுவன உரிமையாளரின் வீடு, அலுவலகங்களில் ஐடி ரெய்டு! - today latest news
🎬 Watch Now: Feature Video
Published : Dec 6, 2023, 10:28 PM IST
தேனி: தேனியில் பிரபல பருப்பு மில் உரிமையாளர் ஏ.எம்.ஆர்.சந்திரகுமாருக்குச் சொந்தமான அலுவலகம், பருப்பு மில் மற்றும் அவரது வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் மதுரையைச் சேர்ந்த வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் மைக்கேல் ஜெரால்டு வழிகாட்டுதலின்படி 3 வருமான வரித்துறை துணை இயக்குநர்களின் தலைமையில் பிற வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தேனியில் செயல்பட்டு வரும் ஏ.எம்.ஆர் நிறுவனத்திற்குச் சொந்தமான பருப்பு மில்லில் இருந்து தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பருப்பு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் பருப்பு வகைகளுக்கு விலை நிர்ணயம் செய்யும் வகையில் இந்தியா முழுவதும் பருப்புகளை விற்பனை செய்யும் பிரபல பருப்பு மில் உரிமையாளர் ஏ.எம்.ஆர்.சந்திரகுமாரின் அலுவலகம், பருப்பு மில் மற்றும் அவரது வீடு ஆகியவற்றைச் சென்னை கோவை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் போன்ற இடங்களில் இருந்து வந்துள்ள வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்த சம்பவம் தேனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.