ஹைதராபாத் முதல் முறையாக ‘ரயில் உணவகத்தை’ பெற்றுள்ளது: தெற்கு மத்திய ரயில்வேயின் புதிய முயற்சி - variety of cuisines
🎬 Watch Now: Feature Video
ஹைதராபாத்: தெற்கு மத்திய ரயில்வே முதல் முறையாக ரயில் உணவகத்தை ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹைதராபாத் சமீபத்தில் தன் முதல் ரயில் உணவகத்தை காச்சிகுடா ரயில் நிலையத்தில் அமைத்துள்ளது. தெற்கு மத்திய ரயில்வேயின் புதிய முயற்சியின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.
அழகான உட்புறத்துடன் புதுப்பிக்கப்பட்ட இரண்டு பாரம்பரிய ரயில் பெட்டிகளை பயன்படுத்தி இந்த உணவகம் உருவாக்கப்பட்டுள்ளது. உணவகத்தில் வேலை பார்க்கும் தொழிலாளி திலிப் சிங் கூறுகையில், “இந்த உணவகத்தில் செய்யப்பட்டிருக்கும் அலங்காரங்களுக்கு ஒரு வரலாறு உல்லது. இங்கு இருக்கும் ஒவ்வொரு படத்திற்கும் ஒரு தனி வரலாறு உல்லது. இந்த அலங்காரமாணது ஆங்கிலேயர் காலத்திற்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது”.
செகந்திராபாத்தை சேர்ந்த ‘பரிவார்ஸ் ஹேவ் மோர்’ எனும் நிறுவனம் இந்த உணவகத்தை நடத்துவதற்கான ஐந்து ஆண்டுகால ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. வட இந்திய, தென்னிந்திய, மொகலாய, சைனீஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு வகைகளும் 24 மணி நேரமும் உணவகத்தில் கிடைக்குமாரு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிங் கூறுகையில், “எங்கள் முதலாளி மாலிக் சார், தெலுங்கானா மாநிலம் முழுவதும் பயணம் செய்துள்ளார். ஆனால் இது போன்ற புதுமையான உணவகத்தை எங்கும் காணவில்லை. அதனால் அவர் ஒரு ரயில் பெட்டியை எடுத்து அதில் உணவகத்தை அமைக்க திட்டமிட்டார். சுமார் ஒரு வருடம் கழித்து இந்த போகியை குத்தகைக்கு எடுத்து உணவகத்தை துவங்கினார்” என கூறியுள்ளார்.
இந்த உணவகத்தின் உணவு மற்றும் தனித்துவமான சாப்பாட்டு அனுபவத்தை பெற நகரின் அனைத்து பகுதிகளிலிருந்து மட்டுமள்ளாது அண்டை பகுதிகளில் இருந்தும் மக்கள் குவிந்துள்ளனர். இந்த தனித்துவமான உணவகத்துக்கு வந்த பவித்ரா கூருகையில், “நான் செகந்திராபாத்தில் இருந்து வந்திருக்கிறேன். இன்ஸ்டாகிராமில் இப்படி ஒரு ரயில் எக்ஸ்பிரஸ் இருப்பதைப் பார்த்தேன். ரயிலுக்குள் ஒரு உணவக அமைப்பு இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. இதுபோன்று நான் பார்த்ததில்லை, இங்கு வருவது இதுவே முதல் முறை" என கூறினார்.
மற்றொரு வாடிக்கையாளரான ஷியாம் சுந்தர் கூறுகையில், "இந்த ரயிலில் வசதி நன்றாக உள்ளது. ரயிலில் சாப்பிடுவது போன்ற கான்செப்ட் எங்கும் இல்லை, கச்சிகுடா ஸ்டேஷனில் உள்ள இந்த புதிய உணவகம் அழகாக இருக்கிறது" என்றார். உணவு மீது ஆர்வமுள்ளவர்கள் இதன் மூலம் ஒரு தனித்துவமான உணவு சேவையைப் பெறுவார்கள் என்று ரயில்வே அதிகாரிகள் நம்புகின்றனர். மேலும் இந்த புதிய அமைப்பால் அதிகமான மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கின்றனர்.