Viral video: உயிருக்கு போராடிய குழந்தை...ஆம்புலன்ஸூக்கு வழிவிடாத கார்... - Punjaipuliyampatti
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள புங்கம்பள்ளி பகுதியில் இருந்து மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட மூன்று மாத குழந்தையை ஏற்றிக்கொண்டு அவசர சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சைரன் ஒலித்தவாறு ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த இன்னோவா கார் ஒன்று இடது புறமாக செல்லாமல் நடுரோட்டிலும், சைரன் ஒலித்தவாறு சென்ற ஆம்புலன்ஸூக்கு வழி விடாமலும் வேகமாக சென்றது.
அந்த கார் தொடர்ந்து பல கி.மீ. தூரத்துக்கும் மேலாக ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வேகமாக சென்ற இன்னோவா காரை முந்தி செல்ல முடியாமல் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தடுமாறினார். ஆம்புலன்ஸூக்கு வழி விடாமல் வேகமாக சென்ற காரை தனியார் ஆம்புலன்ஸ் உதவியாளர் வீடியோ பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வாட்ஸஅப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.