நடிகர் மயில்சாமியின் உடல் மருத்துவமனையில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட காட்சிகள்! - Actor Mayilsamy Passed away
🎬 Watch Now: Feature Video
சென்னை: விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தில் வசித்து வந்தவர், தமிழ்த் திரைப்பட காமெடி நடிகர் மயில்சாமி. இவர் காமெடி நடிகர் ஆவதற்கு முன்பாக தனது குரல் வளத்தால் பல மேடை நிகழ்ச்சிகளில் பல குரல்களில் பேசி மிமிக்ரி செய்து பிரபலமானவர். பின்னர், தமிழ் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து உச்சம்தொட்டவர்.
இந்நிலையில், தமிழ் சினிமாக்களில் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்த மயில்சாமிக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அவரது உறவினர்கள் அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் மயில்சாமி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்படும் என தகவல் வெளியான நிலையில் நடிகர் மயில்சாமி ஏற்கனவே இதயம் சம்பந்தமாக இதே மருத்துவமனையில் அடிக்கடி சிகிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்தது. எனவே, மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இதையடுத்து அவரது மகன்களிடம் மயில்சாமியின் உடல் ஒப்படைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலமாக பொதுமக்கள் அஞ்சலிக்காக அவர்களது வீட்டிற்கு நடிகர் மயில்சாமியின் உடலை அவரது மகன்கள் கண்ணீர் மல்க எடுத்துச் சென்றனர்.